பாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்

பாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்

பாதுகாப்பாக சென்றும் பறிபோச்சு ரூ.20 லட்சம்
Published on

மிளகாய் பொடித் தூவி ரூ.20 லட்சம் வங்கிப் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளைக்குப் பணம் தேவைப்பட்டதால், கார் ஒன்றில் மல்லிப்பட்டினம் வங்கிக் கிளையில் இருந்து 20 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. பழனி என்பவர் காரை ஓட்டிச் சென்றார். அவருடன் வங்கி மேலாளர் அரவிந்த்குமார், காசாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பணத்துக்குப் பாதுகாப்பாகச் சென்றனர்.

காசாங்காடு நடைபாலம் அருகே கார் வந்தபோது வழிமறித்த இரண்டு கொள்ளையர்கள், அதில் இருந்தவர்கள் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி பணத்தை திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com