\
ரூ.5.78 கோடி‌‌ கொள்ளை வழக்கு: பீகார் விரைந்தது தனிப்படை

ரூ.5.78 கோடி‌‌ கொள்ளை வழக்கு: பீகார் விரைந்தது தனிப்படை

ரூ.5.78 கோடி‌‌ கொள்ளை வழக்கு: பீகார் விரைந்தது தனிப்படை
Published on

ரயிலில் வந்த வங்கிப் பணம் 5.78 கோடி பணம் கொள்ளை போன வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தமிழக சிபிசிஐடி தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர். 

ரயில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்த ஒருவருக்கு பீகார் மாநிலத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க போலீசார் அங்கு சென்றுள்ளனர். 

கடந்த 2016 ஆம் ஆண்டும் ஆகஸ்ட் 8ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலில், வங்கிப் பணம் 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐ‌டி போலீசார் வழக்கு பதி‌வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் குற்றவாளிகள் க‌ண்டுபிடிக்கப்படாத நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காட்டுபவர்களுக்கு 2 ல‌ட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com