இந்தி தெரியாதா? லோன் இல்லை: வங்கி மேலாளர் பணியிடமாற்றம்

இந்தி தெரியாதா? லோன் இல்லை: வங்கி மேலாளர் பணியிடமாற்றம்
இந்தி தெரியாதா? லோன் இல்லை: வங்கி மேலாளர் பணியிடமாற்றம்

(பாலசுப்பிரமணியன்)

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I don't know Hindi, but i know Tamil and English" என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். "I am from Maharashtra, I know Hindi. Language problem" என தெரிவித்துள்ளார் மேலாளர் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, தான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com