வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கிகள் இணைப்பு என்ற பெயரில் மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 80,000 இளைஞர்களின் வேலைவாய்ப்பை தடுத்து நிறுத்துவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதை கண்டித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
எனினும் இந்த வேலை நிறுத்தத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஊழியர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிகிறது. இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.