சென்னை: பங்களாதேஷைச் சேர்ந்த நபர் கொரோனாவால் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8718 ஆக அதிகரித்துள்ளது.
61 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 2,134 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு 4,882 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷைச் சேர்ந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷ் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.