பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார், வாழை இலை விலை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார், வாழை இலை விலை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகை: தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார், வாழை இலை விலை அதிகரிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார், வாழை இலை விலை அதிகரித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்காண ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் வாழைக்காய் மற்றும் வாழை இலைகள் தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படும்.

பொங்கல் திருநாளையொட்டி வாழைக்காய் மற்றும் வாழைத்தார்கள், வாழை இலைகள் தூத்துக்குடி சந்தைக்கு குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் விலை அதிகரித்துள்ளது. 300 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார் இரட்டிப்பு விலையாக 500 மற்றும் 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ரஸ்தாளி ஒரு தார் 800 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 900 ரூபாய்க்கும், பூவன் 600 ரூபாய்க்கும், நாட்டு வாழை 700 முதல் 800 ரூபாய்க்கும், செவ்வாழை 1000 ரூபாய் க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்குச்செல்ல தடை போன்றவற்றால் விற்பனை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com