விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி தினத்தையொட்டி மாதம்தோறும் சதுரகிரி மலைக்குச் சென்று பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மலைப் பகுதியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்கள் செல்லும் பாதை மோசமான நிலையில் உள்ளது. இதன் வழியே செல்லும் பக்தர்கள் ஆபத்தான பல பகுதிகளை கடக்க வேண்டும் என்பதால், பாதுகாப்பு கருதி மலை ஏற தொடர்ந்து 2 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதோஷ வழிபாட்டிற்காக பல்வேறு பகுதியில் இருந்து வந்த பக்தர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இதே போல் கனமழை தொடர்ந்தால், சதுரகிரி மலைக்குச் செல்ல தடை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.