\
திருச்செந்தூரில் கடலில் நீராட தடை

திருச்செந்தூரில் கடலில் நீராட தடை

திருச்செந்தூரில் கடலில் நீராட தடை
Published on

திருச்செந்தூரில் இன்றும் நாளையும் கடலில் நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமானை வழிபட வரும் பக்தர்கள், கடலில் நீராடி கோயிலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்றும் நாளையும் கோயில் கடற்கரைக்குச் செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் வழக்கம்போல கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com