தமிழகத்தில் பீட்டாவை தடை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழகத்தில் பீட்டாவை தடை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்

தமிழகத்தில் பீட்டாவை தடை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்
Published on

பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் பழ.நெடுமாறன் எழுதிய வள்ளலார் மூட்டிய புரட்சி நூல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட பழ.நெடுமறான் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஒரு பெரும் புரட்சியை நடத்தி இருக்கிறார்கள், இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள் என்று கருதக்கூடாது தொடர்ந்து தமிழகம் இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. காவேரி, முல்லைப்பெரியாறு, இலங்கை தமிழர் பிரச்சனையிலும் காங்கிரஸ் அரசும் தொடர்ந்து பா.ஜ.க அரசும், தமிழகத்திற்க்கு வஞ்சனை செய்கின்றனர் என்று மாணவர்கள் மத்தியில் இருந்த கொதிப்பு தற்போது வெளிவந்துள்ளது என்றார்.

மேலும் பீட்டா அமைப்பு தடை செய்ய வேண்டும் என்று மாணவர்களின் கோரிக்கை நியாயமானது பீட்டா அமைப்பு ஒரு அன்னிய நாட்டு அமைப்பு ஆகும், அன்னிய நாட்டுப்பணம் நம் நாட்டிற்க்கு வரக்கூடாது என்று மத்திய அரசு சொல்கிறது. வெளிநாடுகளிலிருந்து தன்னார்வு தொண்டு நிறுவணம் மூலம் நம் நாட்டிற்க்கு வரும் பணத்தை மத்திய அரசு தடை செய்தது. அதே நேரத்தில் பீட்டா அமெரிக்காவில் தலைமை இடமாக கொண்டு இங்கு கிளை அமைத்து செயல்படுகின்றனர் அவர்களுக்கு பணம் எப்படி வருகின்றது என்று கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் நாட்டு மாட்டை ஒழித்துவிட்டு, ஜெர்சி மாட்டை இறக்குமதி செய்வதற்க்காகவே பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கினர். இப்படிப்பட்ட பீட்டா அமைப்பை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com