நீட் எதிர்ப்பு: திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நீட் எதிர்ப்பு: திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு
நீட் எதிர்ப்பு: திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் இன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்கூட்டத்திற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று மாலை திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்க இருந்தனர். கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்னும் சில மணி நேரத்தில் கூட்டம் தொடங்க இருந்தது. இந்நிலையில் திமுக கூட்டம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி காவல்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், திருச்சி மாநகர காவல்துறை திமுக பொதுக்கூட்டதிற்கு திடீரென அனுமதி மறுத்துள்ளது.  
இது குறித்து கே.என்.நேரு கூறுகையில், போராட்டம் நடத்தத்தான் தடை. பொதுக் கூட்டம் நடத்தத் தடை இல்லை. முதலில் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு திடீரென்று காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com