ஆங்கில புத்தாண்டு: 3 நாட்களுக்கு குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

ஆங்கில புத்தாண்டு: 3 நாட்களுக்கு குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
ஆங்கில புத்தாண்டு: 3 நாட்களுக்கு குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை

ஓமைக்ரான் அச்சம் காரணமாக குற்றால அருவிகளில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் ஆங்கில புத்தாண்டையொட்டிய மூன்று நாட்களுக்கு குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

பல மாதங்களுக்குப் பிறகு கடந்த 20ஆம் தேதியன்று குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிகாட்டுதலுடன் நெறிமுறைகளை கடைப்பிடித்து அனுமதி கொடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் அதிக அளவில் குளித்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஓமைக்ரான் அச்சம் காரணமாகவும், புத்தாண்டு மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு வரும் 31.12.2021 முதல் 02.01.2022ஆகிய மூன்று நாட்களிலும் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com