காவலரை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம்.. விரட்டிய போலீஸ்..!

காவலரை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம்.. விரட்டிய போலீஸ்..!
காவலரை தாக்கி வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம்.. விரட்டிய போலீஸ்..!

வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு சிலர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், வெம்மணி கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு, முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மூளிப்பட்டி பகுதிக்கு, அங்குள்ளள அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று காலை முதலே விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 296. இதில் 250 வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை முதலே சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.

பதற்றமாகவே காணப்பட்ட இப்பகுதியில், 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அன்பழகன், வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிவையில் வாக்குப் பெட்டிக்கு சீல் வைத்தார். தொடர்ந்து பதிவான வாக்கு விவரங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 5.20 மணியளவில் அங்கு வந்த சிலர் வாக்குச்சாவடியில் சத்தமிட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலரைத் தாக்கி விட்டு, திடீரென வாக்குச்சாவடியின் உள்ளே நுழைந்து, சீல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினர்.

வாக்குப்பதிவு அலுவலர்கள் சத்தமிடவே போலீசார் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடினர். அருகிலிருந்த அடைக்கலம் காத்தார் கோயிலுக்கு சொந்தமான முட்புதரில் வாக்குப்பெட்டியை போட்டு விட்டு அவர்கள் ஓடி விட்டனர். விரட்டி வந்த போலீசார் 5.50 மணியளவில் வாக்குப் பெட்டியை மீட்டு கொண்டு வந்தனர். வாக்கு பெட்டியை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் மூர்த்தி, சரவணன், அயப்பன், கருப்பையா ஆகிய நான்கு பேர் மீது மண்டையூர் போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மூர்த்தி(24) என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், வருவாய் கோட்டாட்சியர் டெய்சி, வருவாய் வட்டாட்சியர் சதீஷ்குமார், கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் ஆகியோர் விசார

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com