தமிழகத்திற்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகளை கவறுகின்ற வகையில், மெக்ஸிக்கோ நாட்டில் நடத்தப்படும் பலூன் திருவிழாவை போன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெரிய அளவில் பலூன் திருவிழா நடத்தப்படும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின கீழ் இயங்கும் உதகை படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லம் போன்ற சுற்றுலாத் தளங்களை இன்று ஆய்வு மேற்கொண்டிருந்தார் அமைச்சர் மதிவேந்தன். பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், “கோவிட் பெருந்தொற்று காரணமாக சுற்றுலா துறை பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் புக்கிங் அறிமுகம் செய்யப்பட்டதன் பயனாக, கடந்த இரண்டு மாதத்தில் இணைய முன்பதிவு மூலம் 22 லட்ச ரூபாய்க்கு வருவாய் கிடைத்துள்ளது.
பைக்காரா படகு இல்லத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக குளிர் காலத்தில நடத்தப்படும் தேயிலை சுற்றுலா விழா இந்த ஆண்டு நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். உடன் நீலகிரி மாவட்டத்தில் கேபிள் கார் அமைப்பது குறித்து உள்ள சாத்திய கூறுகளும் ஆராயப்படும். மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் பங்கேற்றதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. அதேபோல தமிழகத்திலும் மேற்கொள்ள ஆராயப்படும்.
மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பலூன் திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் பங்கேற்றதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. அதேபோல தமிழகத்தில் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.