பக்ரீத் பண்டிகை - செஞ்சி வாரச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

பக்ரீத் பண்டிகை - செஞ்சி வாரச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
பக்ரீத் பண்டிகை - செஞ்சி வாரச் சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச் சந்தையில் 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மாவட்டம் மற்றும் புதுவை பெங்களுர் போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு நடைபெறும் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள்.

இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை வருவதை முன்னிட்டு இன்று செஞ்சி வாரச்சந்தைல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பெங்களுர் மற்றும் சேலம் திருவண்ணாமலை வேலுர் தருமபுரி சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய குவிந்தனர்.

பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மரி ஆடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் ஆடி அமாவாசையை ஒட்டி கருப்பு ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதையடுத்து இன்று மட்டும் சுமார் 50, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யபட்ட நிலையில், ரூ.6 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றிருக்கலாம் என உள்ளுர் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com