ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்pt desk

பக்ரீத் பண்டிகை | நத்தம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

நத்தம் ஆட்டுச் சந்தையில் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான ஆடுகள் - 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க ஆட்டுச் சந்தைகளில் நத்தம் பகுதியில் நடைபெறும் ஆட்டுச் சந்தை மிகவும் பிரபலம் வாய்ந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில் திண்டுக்கல் மதுரை புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, கொட்டாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை நத்தம் ஆட்டுச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்
வந்தது புதுவகை மயோனைஸ்.. உணவியல் நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்நிலையில், வருகின்ற 7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நத்தம் வாரச் சந்தையில் இன்று ஒரே நாளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப் பட்டிருந்தன. இதில், ஆடுகளின் எடைகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது. வழக்கத்தை விட பக்ரீத் பண்டிகை என்பதால் ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனையானதால் ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com