தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகை!

பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பல்வேறு சிறப்பு தொழுகைகளிலும் கலந்துக்கொண்டு சகோதரத்துவத்தை நிலைநாட்டி வருகின்றனர்
தொழுகை
தொழுகைFile image

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

தியாகம், அர்ப்பணிப்பு - இது அனைத்தும் மனித வாழ்வில் இருக்கவேண்டும். இது தான் ஒரு மனிதனை புனிதனாக்கும். - இது தான் இஸ்லாமியர்களின் கருத்து. இறைவனின் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக இந்நாளானது உலகம் முழுதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில் பிரியாணி தயாரித்து நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும், ஏழைகளுக்கும் அதை உணவாக கொடுத்து இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிறனர்.

இதில் தமிழ்நாட்டில், திருச்சி தென்னூர் அண்ணா நகர் உணவு சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி நகர் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிவாசல்
பள்ளிவாசல்Sathish

கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவில், கோட்டார், இளங்கடை , இடலாக்குடி உட்பட பல பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் தியாக திருநாளையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல திருவிதாங்கோடு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது

வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை நடத்தினர். அனைவரும் புத்தாடை அணிந்து வந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.

PT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஈத்கா மைதானத்தில பக்ரீத் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்றார்.

புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி வந்து ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், விருதுநகர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை களை கட்டியது.

தமிழகத்தை போல புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலை மற்றும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மேலப்பாளையத்திலும் ஈகை திருநாளானது வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com