\
உணவு ஊட்டும்போது விபரீதம் - 3வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை

உணவு ஊட்டும்போது விபரீதம் - 3வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை

உணவு ஊட்டும்போது விபரீதம் - 3வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை
Published on

3-வது‌ மாடியில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, தாயின் கையிலிருந்து தவறி விழுந்த‌ ஒன்றரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர், 3-வது மாடியின் பால்கனியில் நின்றுக்கொண்டு, தனது ஒன்றரை வயது மகள் பூமிக்கு உணவுக் ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தை பூமி, கைதவறி மாடியிலிருந்து கீழே விழுந்தது. 

இதில், தலையில் பலத்த காயமடைந்த குழந்தையை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பூமி உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்தது அப்பகுதியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com