ரூ.1500 க்கு பெண் குழந்தையை விற்ற தந்தை கைது

ரூ.1500 க்கு பெண் குழந்தையை விற்ற தந்தை கைது

ரூ.1500 க்கு பெண் குழந்தையை விற்ற தந்தை கைது
Published on

வறுமை காரணமாக 2 மாத பெண் குழந்தையை ரூ.1500 க்கு விற்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.  

கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமத்தை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் என்பவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மாதகளுக்கு முன் ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது. கவுசிகா என்ற அந்த 2 மாத குழந்தையை செந்தாமரை கண்ணன் சீர்காழியில் ஒரு தம்பதியிடம் 1,500 ரூபாய்க்கு விற்றுள்ளார். கணவர் குழந்தையை விற்றதை அறிந்த தாய் பிரியா மருதூர் காவல்‌நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனை அடுத்து காவல் துறையினர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து குழந்தையின் தந்தை செந்தாமரைக்கண்ணன் கைது செய்யப்பட்டார். செந்தாமரைக்கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வறுமையின் காரணமாக குழந்தையை விற்றதாக கூறியுள்ளார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com