கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தல்..!

கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தல்..!

கடற்கரையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்தல்..!
Published on

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைமேடையில் படுத்துறங்கிய பெண்ணின் 8 மாத குழந்தை கடத்திச் செல்லப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை பூர்விகமாக கொண்டவர் சினேகா. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், கணவரைப் பிரிந்து தனது 8 மாத குழந்தை ராஜேஸ்வரியுடன் சென்னைக்கு வந்துள்ளார். அங்கு ஊசிமணி, மாலைகள், பலூன்கள் விற்று வந்த சினேகா, கடற்கரை சாலையோர நடைபாதையில் நரிக்குறவர் மக்களுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று இரவு வழக்கம்போல, தனது குழந்தையுடன் தூங்கிய சினேகா, எழுந்து பார்த்துபோது குழந்தை காணாமல்போனதால் அதிர்ந்து போனார். எங்கு தேடியும் கிடைக்காததால், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com