ஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி

ஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி

ஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி
Published on

மேலூர் அருகே ஆந்தைக் கண்ணுடன் பிறந்த வினோத ஆட்டுக் குட்டி சில மணி நேரத்திலே உயிரிழந்தது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.இவருக்கு, சொந்தமான ஆடு, இன்று காலை 9 மணியளவில் பெண் குட்டி ஒன்று ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு வினோதமாக இருந்தது. அதற்கு ஆந்தையைப் போன்று கண்கள் மற்றும் முக அமைப்பு கொண்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த வினோத ஆட்டுக்குட்டியை பார்க்க திரண்டனர். அந்த ஆட்டுக்குட்டியை சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இந்நிலையில்  திடிரென மூச்சுத் தினறல் ஏற்பட்டு இந்த வினோத ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் மிகவும் சோகமடைந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com