தொப்புள் கொடியுடன் கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை - விவாகரத்து பெண்ணிடம் விசாரணை

தொப்புள் கொடியுடன் கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை - விவாகரத்து பெண்ணிடம் விசாரணை

தொப்புள் கொடியுடன் கிணற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை - விவாகரத்து பெண்ணிடம் விசாரணை
Published on

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையம் அருகே உள்ள கிணற்றில் பிறந்து ஒரே நாளான குழந்தை இறந்து மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி காவல்நிலையம் அருகில் கிணறு ஒன்றில் பிறந்து ஒரே நாளான பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் , சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறைனருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையை உடற்கூறு ஆய்விற்காக சிவந்திப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காவல்துறைனர் அப்பகுதில் வள்ளலார் தெருவைச் சேர்ந்த விவகாரத்துப் பெற்ற ஒரு பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com