\
வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'

வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'

வண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'
Published on

சென்னை அருகே வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக வந்துள்ள குட்டி யானை, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அசோக் என்கிற 8 வயது ஆண் யானை மருத்துவர்களின் ஆலோசனை பேரில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்டது. அதேவேளையில் அங்கிருந்த ரோகிணி என்ற 4 வயது பெண் யானை பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. புதிதாக வந்துள்ள ரோகினி யானையை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். அதனை செல்போனில் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com