\
அத்திவரதர் கோயில் வளாகத்தில் பிறந்த ஆண் குழந்தை

அத்திவரதர் கோயில் வளாகத்தில் பிறந்த ஆண் குழந்தை

அத்திவரதர் கோயில் வளாகத்தில் பிறந்த ஆண் குழந்தை
Published on

அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த விஜயா என்ற கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அத்திவரதர் வைபவத்தின் 45-ஆவது நாளான இன்று சுவாமி, ரோஜா நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மற்றும் மல்லிகை‌ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அத்திவரதரை இன்னும் 2 நாட்கள் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்பதால், காஞ்சிபுரத்தில் மக்களின் வருகை அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் அத்திவரதர் தரிசனத்திற்கு வந்த விஜயா என்ற கர்ப்பிணிக்கு கோயில் வளாகத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நிறைமாத கர்ப்பிணியான விஜயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாமில் விஜயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை, சுமார் 3 கிலோ எடை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com