கரும்புத் தோட்டத்தில் கிடந்த 2 வயது குழந்தையின் உடல் பாகங்கள்: நரபலியா?

கரும்புத் தோட்டத்தில் கிடந்த 2 வயது குழந்தையின் உடல் பாகங்கள்: நரபலியா?

கரும்புத் தோட்டத்தில் கிடந்த 2 வயது குழந்தையின் உடல் பாகங்கள்: நரபலியா?
Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் கொல்லப்பட குழந்தை நரபலி கொடுக்கப்பட்டுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது.‌

மன்னார்குடி அருகே பைங்காநாடு பகுதியில் சோமு என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. அங்கு 2 வயது மதிக்கத்தக்க குழந்தையின் கை மற்றும் கால் வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளன. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலுறுப்புகளை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரும்புத் தோட்டம் ‌முழுவதுமாக தேடியபோதும் குழந்தையின் இதர உடலுறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால் நரபலி கொடுப்பதற்காக குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com