\
உடல்நலக்குறைவு: பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு: பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு: பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி
Published on
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
யூடியூப் சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசும் வீடியோ, ஆடியோக்களை பதிவிட்டதாக எழுந்த புகாரில், பப்ஜி மதனை கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி சேலத்தில் போலீசார் கைது செய்தனர். இதன் பின்னா் அவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதி பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்ஜி மதன், முதுகு வலியால் பாதிக்கப்பட்டாா்.
இதற்கு சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும் அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் மதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்பட்டாா். சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com