\
ஆழியாறு அறிவுத் திருக்கோயில்: ஆன்லைன் மூலம் தவம் செய்து உலக சாதனை

ஆழியாறு அறிவுத் திருக்கோயில்: ஆன்லைன் மூலம் தவம் செய்து உலக சாதனை

ஆழியாறு அறிவுத் திருக்கோயில்: ஆன்லைன் மூலம் தவம் செய்து உலக சாதனை
Published on

ஆழியாறு அறிவுத் திருக்கோயில், வேதாத்திரிய வேள்வி தினத்தை முன்னிட்டு பல நாடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் தவத்தில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர்.

பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு பகுதியில் அமைந்துள்ளது அறிவுத்திருக்கோயில். இந்த அறிவுத்திருக்கோயிலின் நிறுவன தலைவரும் யோக குருவுமான வேதாத்திரியின் 15ஆம் ஆண்டு வேள்வி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் கூட்டம் சேர்வதை தவிற்கும் விதமாக தவ நிகழ்ச்சியை ஆன் லைன் மூலம் நடத்த முடிவு செய்த நிர்வாகம், உலக நாடுகளில் உள்ள அனைவரையும் இந்த வேள்வி தினத்தில் பங்குபெற செய்து உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ய முடிவு செய்தனர்.

அதேபோல் இன்று நடந்த 15வது வேள்வி தினத்தில் துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் பேர் தவத்தில் பங்கேற்று உலக சாதனை நிகழ்த்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com