சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் குழந்தைகளுக்கான 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் எழுத, பழக வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்தனர். தட்டில் அரிசியை பரப்பி, அதில் குழந்தையின் விரல் பிடித்து எழுத வைத்தனர். அவ்வாறு எழுத வைத்தால் பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அதில் பங்கேற்ற பெற்றோர்கள் மகிழ்ச்சியாக கூறினர். மேலும் இந்நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.