
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சட்டையில்லாமல் சென்ற விவசாயி அய்யாக்கண்ணு, சந்திப்பிற்கு பின் சட்டை அணிந்துக்கொண்டு வெளியே வந்தார்.
அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் சட்டை இல்லாமல் முதலமைச்சரை சந்திக்க இன்று காலை தலைமைச் செயலகம் சென்றனர். சட்டையில்லாமல் சென்ற அய்யாக்கண்ணுவிடம், முதல்வரை சந்திக்கும் போது சட்டை அணிந்து தான் செல்லவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து கையில் எடுத்துச் சென்ற சட்டையை அணிந்த விவசாயிகள் அதன் பின்னர் முதலமைச்சர் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் சட்டை அணிந்துக்கொண்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும் அவர் அறிவித்தார். மேலும் மீண்டும் சட்டையை கழட்டுவதும் போட்டுக்கொண்டிருப்பதும் அரசின் கையில் தான் இருக்கிறது என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.