\
அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..! - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..! - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு..! - இஸ்லாமிய அமைப்புகள் முடிவு
Published on: 

அயோத்தி வழக்கு‌ தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் (All India Muslim Personal Law Board - AIMPLB) மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்பதா அல்லது வழக்கில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா என்று ஆலோசிக்கப்பட்டது. முஸ்லிம் அமைப்பான பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் சன்னி வகுப்பு வாரியம், அசாதுதீன் ஓவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட அமைப்புகள் கூட்டத்தில் கலந்துகொண்டன. இந்நிலையில் அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். விரைவில் இந்த மனு தக்கால் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com