\
திரைப்படக்கலைஞர்களுக்கு விருதுகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

திரைப்படக்கலைஞர்களுக்கு விருதுகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

திரைப்படக்கலைஞர்களுக்கு விருதுகள்: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
Published on: 

தமிழகத்தில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2018ம் ஆண்டுகள் வரையில் திரைப்பட விருதுகளுக்கு தகுதியுடைய படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது விருதுகளுக்கு அக்டோபர் 29 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com