இந்த ஆண்டுக்கான பால் புரஸ்கார் விருது நாடகக் கலைஞர் வேலு சரவணனுக்கும், யுவ புரஸ்கார் விருது மனுஷி என்கிற ஜெயபாரதிக்கும் கிடைத்துள்ளது.
பல்வேறு மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி, பால் புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியில், ’ஆதி காதலின் நினைவுக் குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக மனுஷி என்கிற ஜெயபாரதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, குழந்தைகளுக்கான நாடகங்கள், கதை சொல்லல், குழந்தைகளுக்கான இலக்கிய தொகுப்புகள் என பல்வேறு தளங்களில் இயங்கிவரும் வேலு சரவணன், பால் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வேலு சரவணன், புதுச்சேரி பல்கலைக்கழத்தின் நாடகத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் பதக்கமும், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலையும் வழங்கப்படும்

