எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது: தமிழக அரசு அறிவிப்பு

எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது: தமிழக அரசு அறிவிப்பு
எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது: தமிழக அரசு அறிவிப்பு

கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் எனக் கருதப்படும் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளை முதல்வர் அறிவித்துள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் எனக் கருதப்படும் கி.ராஜநாரயணனுக்கு உ.வே.சா விருது வழங்கப்பட உள்ளது. 1958-ஆம் ஆண்டில் சரசுவதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. அதன் பின்னர் தொடர்ந்து எழுதி வந்த இவர், கரிசல் வட்டாரவழக்கு அகராதி என்னும் அகராதியை உருவாக்கினார். இசையிலும், பழந்தமிழ் இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்ட இவர், நாளிதழ்களிலும் - திங்கள், வார இதழ்களிலும் புறப்பாடு,கண்ணிமை, வால் நட்சத்திரம், ஒரு வாய்மொழிக் கதை, அப்பா பிள்ளை, அம்மா பிள்ளை, மிருகமனிதன், விடுமுறையில் உள்ளிட்ட 81 படைப்புகளைத் தந்துள்ளார். மற்ற விருதுகளின் விவரம்:

கம்பர் விருது - மருத்துவர் எச்.வி. ஹண்டே

திருவள்ளுவர் விருது - வைகைச் செல்வன்

தந்தை பெரியார் விருது - தமிழ் மகன் உசேன்

மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்

தமிழ்த்தாய் விருது - வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்

கபிலர் விருது - செ. ஏழுமலை

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com