\
மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது

மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது

மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது
Published on: 

மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார்.

ஈஷா பசுமை இயக்கம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பசுமை பள்ளி இயக்கத்தின் 3-ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் மரக் கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

இதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மரங்கள் வளர்ப்பை பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வரும் ஈஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இயக்கம் மூலம் 45 லட்சம் மரங்களை மாணவர்கள் நட்டு சாதனை படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com