திருவாரூர், நாகையில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர், நாகையில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருவாரூர், நாகையில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் கனமழை பெய்தது. இன்று அதிகாலை முதல் திருவாரூர், புலிவலம், நன்னிலம், கங்களாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு தாணிக்கோட்டகம், அண்ணாப்பேட்டை, தேத்தாக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மானாவரி பகுதியில் நேரடி நெல்விதைப்பு செய்து பயிர்கள் முளை வந்த நிலையில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com