ஆவடி: பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்கள்; நூதன தண்டணை வழங்கிய போலீசார்

ஆவடி: பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்கள்; நூதன தண்டணை வழங்கிய போலீசார்

ஆவடி: பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்கள்; நூதன தண்டணை வழங்கிய போலீசார்
Published on

பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி தோப்புக்கரணம் போடச் சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும்போது ஓடும் மாநகர பேருந்துகளில் அஜாக்கிரதையாக பயணம் செய்வது, சாகசங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தட்டிக் கேட்கும் ஓட்டுநர்கள் நடத்துநர்களை மாணவர்கள் அவதூறாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து சமீபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாச்சல ராஜா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆவடியில் இருந்து கன்னியம்மன் நகர், கோயில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மாநகர பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய போலீசார் அவர்களை தோப்புக்கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை வழங்கினர். மேலும் போலீசார் அவர்களுக்கு அறிவுரைகளை கூறி எச்சரித்து வீட்டிற்கு அனுப்பினர். அலுவல் நேரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பேருந்து எண்ணிக்க அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com