\
ஆவடி: விமானப்படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு; பார்வையாளர்களை கவர்ந்த சாகச நிகழ்ச்சி

ஆவடி: விமானப்படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு; பார்வையாளர்களை கவர்ந்த சாகச நிகழ்ச்சி

ஆவடி: விமானப்படை பயிற்சி நிறைவு அணிவகுப்பு; பார்வையாளர்களை கவர்ந்த சாகச நிகழ்ச்சி
Published on: 

ஆவடி விமானப்படை தளத்தில் பயிற்சி நிறைவு அணிவகுப்பையொட்டி நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

சென்னை ஆவடியில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் எந்திரப் போக்குவரத்து பயிற்சி மையம் மற்றும் விமானப்படை காவல் மற்றும் பாதுகாப்பு பயிற்சி மையத்தில், ஆட்டோ மொபைல் டெக்னிஷியன், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற்ற 510 பேர் தங்களது பயிற்சிக் காலம் நிறைவடைந்ததையடுத்து விமானப்படை பணியில் இணைக்கப்பட்டனர்.

இதையொட்டி நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பை, விமானப்படையின் ஆவடி சாதனக் கிடங்கு பிரிவு ஏர் கமாண்டர் எஸ்.சிவக்குமார் பார்வையிட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பயிற்சியின்போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஏர் கமாண்டர் சிவக்குமார், வீரர்களின் கண்கவர் சாகசங்கள் மற்றும் அணிவகுப்பு குறித்து வெகுவாக பாராட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com