liquor vending machine
liquor vending machinePT

பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் - சென்னையில் அறிமுகம்!

பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சோதனை அடிப்படையில் சென்னையில் அமலுக்கு வந்துள்ளது.
Published on

வெளிநாடுகளில் இருப்பது போல பணம் செலுத்தினால் மது வழங்கும் தானியங்கி இயந்திரம் சென்னையில் நான்கு
இடங்களில் பரிசோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் சூழலில், அதை தடுக்கவும் மதுபாட்டில்களை விற்க மாற்று ஏற்பாடு செய்யவும் இந்த மதுபான தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பரிசோதனை அடிப்படையில் சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் பணம் செலுத்தினால், வேண்டும் மதுபான வகை வந்து விழுகிறது.

21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்த இயந்திரம் மூலம் மதுபானம் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அத்துமீறலை தடுக்க இயந்திரத்தின் அருகில் டாஸ்மாக் விற்பனையாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com