\
துணை நடிகையின் பெயரை வைத்து ஆட்டோ திருட்டு 

துணை நடிகையின் பெயரை வைத்து ஆட்டோ திருட்டு 

துணை நடிகையின் பெயரை வைத்து ஆட்டோ திருட்டு 
Published on

சென்னை சாலிகிராமத்தில் நூதன முறையில் ஆட்டோவை திருடிச் சென்றவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஜாவித். இவர் தனது ஆட்டோவை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்தார். இவரது ஆட்டோவில் ஏறிய நபர் ஒருவர்  சாலிகிராமத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றதும் துணை நடிகை ஒருவரை அழைத்து வர வேண்டும் நீங்கள் வந்தால் சரியாக இருக்காது என அந்த நபர் ஆட்டோ ஓட்டுநர் ஜாவித்திடம் தெரிவித்துள்ளார். 

நடிகை எனக்கூறியதால் ஜாவித்தும் நம்பி ஆட்டோவை அந்த நபரிடம் கொடுத்து துணை நடிகையை அழைத்து வருமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நீண்ட நேரமாகியும் ஆட்டோ எடுத்துச்சென்ற நபர் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாவித் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com