மதுரை: மாட்டுதாவணியில் ஆயுத பூஜையை வெகு விமர்சையாகக் கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள்

மதுரை: மாட்டுதாவணியில் ஆயுத பூஜையை வெகு விமர்சையாகக் கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள்
மதுரை:  மாட்டுதாவணியில் ஆயுத பூஜையை வெகு விமர்சையாகக் கொண்டாடிய ஆட்டோ ஓட்டுநர்கள்

மதுரை மாட்டுதாவணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை வெகு விமர்சையாகக் கொண்டாடினர்.

'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற அடிப்படையில் தங்கள் வாழ்வில் பயணிக்கும் ஆட்டோவிற்கு நன்றி தெரிவித்து வணங்கும் விதமாக மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை விமர்சையாகக் கொண்டாடினர். அனைவரும் தங்களது ஆட்டோக்களை சுத்தம்செய்து வாழைத் தோரணங்களால் அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர்.

பல்வேறு தொழில் போட்டிகள் இருந்தாலும் அனைத்து ஓட்டுநர்களும் ஒற்றுமையுடம் ஆயுத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒலி பெருக்கி அமைக்க அனுமதி இல்லாத நிலையில் ஆயுத பூஜையை கொண்டாடினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com