\
தவறவிட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

தவறவிட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

தவறவிட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
Published on

சென்னையில் ஆட்டோவில் தவறவிட்ட 50 சவரன் நகையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல்துறையினர் வெகுமதி அளித்து பாராட்டியுள்ளனர்.

குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தை சேர்ந்த சரவணகுமாரின் ஆட்டோவில், ஏறிய ஒருவர் குளக்கரை லட்சுமிபுரம் பகுதியில் இறங்கியுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த நகைப் பையை ஆட்டோவில் தவறவிட்டு சென்றுள்ளார். இதனையறிந்த ஆட்டோ ஓட்டுநர், பயணியை கண்டறிந்து அவரிடமே நகைப் பையை ஒப்படைத்தார். குரோம்பேட்டை காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் சரவணகுமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவரது நேர்மையை பாராட்டி வெகுமதி அளித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com