கூவத்தில் குதித்த பெண்... உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்! குவியும் பாராட்டுகள்!

சென்னையில் நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும் ரொக்கப் பரிசுடன் சான்றிதழ் வழங்கி உள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சந்தீப் ராய் ரத்தோர்- மகேஷ்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சந்தீப் ராய் ரத்தோர்- மகேஷ்x வலைதளம்

சென்னை திருவல்லிக்கேணியில் லாயிட்ஸ் சாலையில் உள்ள சுதந்திரா நகரில் வசித்து வருபவர் மகேஷ். இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். 20.09.2023 அன்று காலை 11.00 மணியளவில் மகேஷ் தனது ஆட்டோவில் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தைக் கடந்து சென்றுள்ளார். அப்போது ​​கூவம் ஆற்றின் அருகே ஒரு கூட்டம் இருப்பதைக் கண்டுள்ளார். எதற்காக இவ்வளவு கூட்டம் இங்கே நிற்கிறது என்று சந்தேகிக்கவே அங்கு சென்று பார்த்ததில், பெண் ஒருவர் கூவம் ஆற்றின் தடுப்பு சுவர் மீது ஏறி ஆற்றில் குதித்ததை அறிந்துள்ளார்.

கூவத்தில் விழுந்த பெண்னை காப்பாற்றிய மகேஷ்
கூவத்தில் விழுந்த பெண்னை காப்பாற்றிய மகேஷ்முகநூல்

இதையடுத்து ஓட்டுநர் மகேஷ், தனது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் கூவத்தில் குதித்து அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

பின் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கயிற்றை கொண்டு அப்பெண்ணை மீட்டுள்ளார் ஓட்டுநர் மகேஷ். பிறகு காவல்துறையினரின் உதவியுடன் கூவத்தில் குதித்த பெண்ணும், மகேஷும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையடுத்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தக்க சமயத்தில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய மகேஷின் துணிச்சலையும், பிறர் உயிரின் மீது கொண்ட அவர் கொண்ட அக்கறையினையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஓட்டுநரின் துணிச்சலான செயலை பாராட்ட நினைத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், அவருக்கு வெகுமதியாக ரொக்கப் பரிசு ரூ.5,000/-, மற்றும் சான்றிதழ் வழங்கி பெருமைபடுத்தினார். இதுபற்றி சென்னை பெருநகர மாநகராட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “ஆட்டோ மனிதருள் மாணிக்கம்” என குறிப்பிட்டு அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com