ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்PT

மதுரை | 100 ரூபாய் செலவில் ஆட்டோவில் மினி ஏசி... டிரைவருக்கு குவியும் பாராட்டு!

ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் வெயில் கொடுமையால் அவதிப்படுவார்கள் என்பதை உணர்ந்து 100 ரூபாய் செலவில் பிளாஸ்டி பைப்புகள் கொண்டு மினி ஏசி வருகிற மாதிரி வடிவமைத்துள்ளார் ஒரு ஓட்டுநர்.

செய்தியாளர் - செ.சுபாஷ்

‘நான் ஆட்டோகாரன் ஆட்டோக்காரன்...

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்...

நியாயம் உள்ள ரேட்டுக்காரன்...

நல்லவங்க கூட்டுக்காரன்...’

- என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப மதுரை நகரில் வாழ்ந்து வருகிறார் ஆட்டோ டிரைவர் ரத்னவேல் பாண்டியன். இவர் தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்காக வித்தியாசமான ஒரு விஷயத்தை செய்துள்ளார். அது என்ன என்று பார்க்கலாம்.

மதுரை பெத்தானியபுரம் பகுதியை அடுத்த இ.பி.காலனியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் ரத்னவேல் பாண்டியன். இவருக்கு திருமணமாகி 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். டிப்ளமோ பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
'படிப்பை விட்றாதீங்கப்பா...' - மேலும் 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி பூரணம் அம்மாள்!

‘கோடை காலத்தில் ஆட்டோ ஓட்ட மிகவும் கஷ்டமாக இருக்கும். அதே நேரம் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளும் வெயில் கொடுமையால் அவதிப்படுவார்கள்’ என்பதை உணர்ந்து வெறும் 100 ரூபாய் செலவில் பிளாஸ்டிக் பைப்புகள் கொண்டு மினி ஏசி தயாரித்துள்ளார். இதன்மூலம் குளிர்ந்த காற்று ஆட்டோவினுள் வருகிற மாதிரி வடிவமைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்

மினி ஏசி எப்படி உருவானது? மூன்று இன்ஞ் பைப் மற்றும் இரண்டு இன்ஞ் பைப்புகளை இணைத்துள்ளார். பின் 100 எம்.எல்.தண்ணீரை பைப்பின் அடியில் வைத்துள்ளார். ஆட்டோ செல்லும்போது மூன்று இன்ஞ் பைப்பின் வழியே காற்று உள்ளே சென்று தண்ணீரில் பட்டு இரண்டு இன்ச் குழாய் வழியே குளிர்ந்த காற்றுடன் வெளியே வருகிறது. இதனால் பயணிகள் வெயில் தாக்கம் தெரியாமல் குளிர்ந்த காற்றுடன் பயணிக்க முடியும் என்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறும் போது, “என் அப்பா ஈஸ்வரன் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் தம்பிகள் இருவரும் போலீஸ். இப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் காக்கி உடையில் மக்கள் சேவை செய்வதால் நானும் காக்கி உடையில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறேன்.

ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்
ஆட்டோ ஓட்டுநர் ரத்னவேல் பாண்டியன்

இருப்பினும் இலவசமாக யாருக்கும் சவாரி செல்வதில்லை. அதே நேரம் பேரம் பேசி சவாரி செல்வதில்லை. நியாயமாக எவ்வளவு வாங்க வேண்டுமோ அதை மட்டும் கேட்டு வாங்கி கொள்வேன்” எனக் கூறினார் ஆட்டோ டிரைவர் ரத்னவேல். இவரின் இந்த ஸ்மார்ட் ஏ.சி.க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com