மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் சிறையில் அடைப்பு

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் சிறையில் அடைப்பு

மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் சிறையில் அடைப்பு
Published on

சேலத்தில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள, பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடந்த 10ஆம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பவில்லை. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தபோது, மாணவியை ரமேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்றது தெரி‌யவந்தது. 

உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரமேஷ் குமாரை கைது செய்த காவல்துறையினர், அந்த மாணவியை மீட்டனர். மாணவியை கடத்திய ரமேஷ்குமார், ஐந்து நாட்களாக அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது. பின்னர் ரமேஷ்குமார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com