16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்

16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்

16 லட்சம் கொள்ளையடித்த நபரை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்
Published on

திருச்சியில் ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்படவிருந்த 16 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

திருச்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் ஒன்றில் பணம் நிரப்ப 16 லட்ச ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட இருந்தது. அப்போது பணத்தை கொண்டு சென்றவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, அடையாளம் தெரியாத நபர் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பணத்துடன் தப்பியோடிய அந்த நபர், பெரம்பலூர் பகுதியில் ஆட்டோ ஒன்றில் சவாரி செய்துள்ளார். 

மதுபோதையில் இருந்த அவர், தனக்கு லாட்ஜில் அறை எடுத்துத் தரும்படி ஆட்டோ ஓட்டுநரிடம் கோரியுள்ளார். தங்கும் விடுதியில் அடையாள அட்டை கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த நபர் வைத்திருந்த கைப் பையில் தேடிப் பார்த்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேமடைந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா, அந்த நபரை பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பது தெரிய வந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com