காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆட்டோ டிரைவர் - குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலைமறியல்

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே காட்டுப் பகுதியில் ஆட்டோ டிரைவர் மர்ம முறையில் உயிரிழப்பு. கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Auto driver
Auto driverpt desk

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

நெல்லை மாவட்டம் நாங்குனேரி அடுத்த பாணாங்குளம் அருகேயுள்ள சூரப்பபுரம் கிராமம் அருகே காட்டு பகுதியில் ஆட்டோ ஒன்று தனியாக நிற்பதாக பாணாங்குளம் போலீசாருக்கு இன்று காலையில் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இளைஞர் சடலமாக கிடந்த நிலையில், அதை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

Road blocked
Road blockedpt desk

விசாரணையில், உயிரிழந்த நபர் நாங்குநேரி அருகே உள்ள இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்த இராமலிங்கம் என்பவரின் மகன் ஆட்டோ டிரைவர் முத்து செல்வன் (29) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Auto driver
கணவன் மனைவிக்கு இடையே தகராறு - புத்திமதி சொன்ன விசிக நிர்வாகியை எரித்துக் கொல்ல முயற்சி

இச்சம்பவத்தில் உண்மை மறைக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com