\
சீமான்
சீமான்Pt web

’சொல்றத கேட்டு செய்ய முடிஞ்சா செய்யுங்க.. இல்லனா’ - சீமான் பேசிய ஆடியோ வைரல்!

நிர்வாகியை கண்டித்து நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on
Summary

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியிடம் கடுமையாக கண்டித்து பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தொகுதிக்குள் தலைமை அனுப்பும் நபர் வரக்கூடாது என்ற எதிர்ப்பை அவர் கடுமையாக சாடி, சொல்வதை செய்ய முடியாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம், வேறு கட்சியில் சேரலாம் என எச்சரித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தனது கட்சியின் நிர்வாகி ஒருவரை கண்டித்து பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆடியோவில் கட்சி நிர்வாகியை சீமான் கடிந்து கொள்வதோடு, சொல்வதை செய்யவில்லை என்றால் கட்சியை விட்டு வெளியேறலாம் என்ற வகையில் பேசியிருக்கிறார். இப்பொழுது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

சீமான்
சீமான்Pt web

ஆடியோவில் சீமான் பேசியது, நானாவது உங்க தொகுதிக்குள்ள வரலாமா. தலைமையிலிருந்து அனுப்பக்கூடிய ஆள் உங்க தொகுதிக்குள்ள வரக்கூடாதுனா, அப்போ நானும் வரக்கூடாதா? இல்ல.. அதுக்கும் ஒரு போர்க்கொடி தூக்குவீங்கலா.

சொல்வதை செய்யவில்லை என்றால் கட்சியிலிருந்து வெளியேறி போய்விட வேண்டியது தானே.. நீங்க சொல்றத எந்த கட்சி செய்ததோ, அந்த கட்சியில் போய் சேர்ந்துக்கங்க. உங்க போர்க்கொடி எல்லாம் கிழிச்சு தூர தூக்கி போடுங்க.. 

சொல்றத கேட்டு செய்ய முடிஞ்சா செய்யுங்க. இல்ல வேணாம்னக்க வெளியிடப் போய்விட வேண்டியது தானே. எதுக்கு இப்ப போர்கொடி தூக்குறீங்க, நீங்க இந்த போர்கொடி எல்லாம் ஒழுங்கா வேலை செய்யும் பொது செஞ்சி இருந்தா ஒருபடி நம்ம மேல போயிருக்கலாம். மேல வளர்ந்து இருக்கலாம். இந்த ஒற்றுமையெல்லாம் அங்க காட்டணும். 

அவர் வரக்கூடாது, வேலை செய்யக்கூடாதுன்னா. நீங்க வெளியேறி போங்க. அவர் இருந்தா வேலை செய்ய முடியாதுன்னா போங்க உங்களை யாரும் இங்க கட்டுப்படுத்தல. இன்றைக்கு அவர் வரக்கூடாது. நாளைக்கு நான் வரக்கூடாது. இப்படிதான சொல்லுவீங்க..

என்னதான் உங்க பிரச்சனை. கட்சி காரன உள்ள வரக்கூடாது, வெளியே போகக்கூடாதுனா என்ன. இஷ்டம் இருந்தா இருங்க. இல்லன்னா போங்க.. யாரும் உங்கள கட்டாயப்படுத்த மாட்டாங்க.. நிறைய கட்சிகல்லாம் இருக்கு. நிறைய கட்சிகள் எல்லாம் வருது. எல்லாரும் போய் சேர்ந்துகிட்டுதான இருக்கிறாங்க. போங்க, நல்லபடியா போங்க..” என பேசியுள்ளார்.

சீமான்
வைத்திலிங்கம் ஊழல் வழக்கு.. விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி! 3 மாதங்களில் முடிக்க ஆணை
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com