”வட்டியுடன் ரூ12 லட்சம் கட்டுங்கள்” ஆட்சியர் அலுவலகம்முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

”வட்டியுடன் ரூ12 லட்சம் கட்டுங்கள்” ஆட்சியர் அலுவலகம்முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

”வட்டியுடன் ரூ12 லட்சம் கட்டுங்கள்” ஆட்சியர் அலுவலகம்முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயற்சி
Published on

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் மற்றும் மகன் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த கணேசன் என்பவர், தொகுப்பு வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தனியார் நிதி நிறுவனத்தில் 6 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடனில் 4 லட்சத்து 31 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்தி விட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணேசன் இறந்துவிட்டார்.

இந்நிலையில், கணேசனின் மகன் பாஸ்கர் மற்றும் மனைவி செல்லம்மாள் ஆகிய இருவரையும் வட்டி உடன் சேர்த்து 12 லட்சம் கடன் தொகையை கட்ட வேண்டும் என நிதிநிறுவனத்தின் சார்பில் மிரட்டல் விடப்பட்டதாக தாய் மற்றும் மகன் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் திடிரென பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றில் தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறைனர் அவர்களைத் தடுத்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com