உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சர் ஆவார் – சீமான் கருத்து

உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சர் ஆவார் – சீமான் கருத்து
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சர் ஆவார் – சீமான் கருத்து

உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சர் ஆவார் என சீமான் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கொரோனா காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் சீமான் ஆஜரானார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...

புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரிய வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் என்மீது வழக்கு போடப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு கொரோனா காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவித்தார்

ஆனால், எங்களை மட்டும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம். உதயநிதி ஸ்டாலின் மீதும் கொரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டது. தற்போது அவர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்வதற்காக இதனைக் கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்தாண்டுகள் அமைச்சராக மாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் அதன் பிறகு நான் பேசுகிறேன். பேசு பொருளாக்கி அமைச்சராக்க முயற்சி அமைச்சராக்க எதிர்ப்பு இல்லை என அரங்கேற்றும் நாடகம்.

புதிய கல்விக் கொள்கை இந்தி, சமஸ்கிருதத்தை தான் ஊக்குவிக்கிறது வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் நுழைவதால் முதலில் உழைப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் பின்னர் மண்ணில் இருந்து வெளியேற்றுவார்கள் இது நடக்கும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com