\
தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி: ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் கைது

தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி: ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் கைது

தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி: ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் கைது
Published on

தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ரவுடி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த எபனேசர் என்பவருக்கு செல்ஃபோன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு நிர்பந்தித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறையினர், ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளிகள் பாஸ்கர், வடிவேலு ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். மற்றொரு வழக்கில் சிறையில் உள்ள ரவுடி ராதாகிருஷ்ணனும், இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com