மதுக்கடையை எதிர்த்த பெண்ணை மதுபாட்டிலால் குத்திய கும்பல்

மதுக்கடையை எதிர்த்த பெண்ணை மதுபாட்டிலால் குத்திய கும்பல்

மதுக்கடையை எதிர்த்த பெண்ணை மதுபாட்டிலால் குத்திய கும்பல்
Published on

சிவகங்கை மாவட்டம் பணங்காடி கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றப் போராடிய பெண்ணை கும்பல் ஒன்று மது பாட்டிலால் குத்தியது.

பணக்காடி கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றகோரி மனு எழுதிய அப்பகுதி சமூக ஆர்வலர் செல்வி, மனுவில் ஊரார் பலரிடம் கையெழுத்து வாங்கினார். அதை திங்கள்கிழமை நடைபெறும் மனு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளிக்க திட்டமிட்டிருந்தார். இதையறிந்த விஜய் மற்றும் அவரது நண்பர்கள் செல்வியிடம் தகராறு செய்துள்ளனர். அவசர போலீஸாருக்கு செல்வி தகவல் அளித்ததையொட்டி அங்கு வந்த போலீஸார், இரு தரப்பினரிடமும் விசாரித்துவிட்டு, காலையில் காவல் நிலையம் வரச்சொல்லி சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், செல்வியை வழிமறித்த மர்ம நபர்கள், அவரை தாக்க முற்பட்டனர். தப்பியோடிய செல்வியின் முதுகில் மதுபாட்டிலை உடைத்து குத்தினர். பலத்த காயமடைந்த செல்வி, சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு‌ள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com